Crans-Montana வில் நகைக் கடை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட கொள்ளை முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.
நேற்று அதிகாலை 2.10 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொள்ளையர்கள் நகைக்கடையின் கண்ணாடிச் சுவரை சுத்தியலால் உடைக்க முயன்ற போதும் அது முடியாமல் போயுள்ளது.
இதனால் அவர்கள் கொள்ளை முயற்சியை கைவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக Valais கன்டோனல் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் பற்றிய தகவலை அறியத் தருமாறும் அவர்கள் கேட்டுள்ளனர்.
மூலம்-20min

