Valais இல் இருந்து Bern இற்கு நேற்று இரவு BLS ரயிலில் பயணம் மேற்கொண்ட பயணிகளுக்கு பெரும் சோதனையாக அமைந்துள்ளது.
Lötschberg சுரங்கத்தில் ரயில் திடீரென நின்று போனதால் பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.
இரவு 10 மணியளவில் இதுகுறித்த முறைப்பாடுகள் கிடைத்தன.
11 மணிக்குப் பின்னரே மீட்டு ரயில் வந்து நின்று போன ரயிலை இழுத்து சுரங்கப்பாதையில் இருந்து வெளியே கொண்டு வந்தது.
அதன் பின்னர் பயணிகள் பேருந்துகள் மூலம் பெர்னிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
சுமார் இரண்டரை மணிநேரம் தாமதமாகவே அவர்கள் பெர்னை சென்றடைந்துள்ளனர்.
மூலம்- 20min