ஸ்பெயினின் தீவான கிரான் கனாரியாவுக்குச் சென்ற எடெல்வைஸ் விமானம் நேற்று பாதியிலேயே சூரிச்சிற்குத் திரும்பியது.
கேபின் அழுத்த அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறினால் விமானம் திரும்ப நேரிட்டது.
நேற்றுக்காலை விமானம் புறப்பட்டுச் சென்று ஒரு மணிநேரத்தில் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் உடனடியாக அந்த விமானம் சூரிச்சிற்கு திருப்பப்பட்டது.
இதனால் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
அவர்களுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மூலம்-20min