21.6 C
New York
Wednesday, September 10, 2025

மாதம்தோறும் 200 மில்லியன் சைபர் தாக்குதல்- போராடும் சுவிஸ்கொம்.

ஒவ்வொரு மாதமும் 200 மில்லியன் சைபர் தாக்குதல்களுக்கு எதிராக செயற்பட வேண்டியுள்ளதாக சுவிஸ் அரசுக்குச் சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான சுவிஸ்கொம், தெரிவித்துள்ளது.

வினாடிக்கு சுமார் 77 சைபர் தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

இந்த  தாக்குதல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுவிஸ்கொம், தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.

எந்த சிறப்பு அறிவும் இல்லாமல் சைபர் தாக்குதல்களை நடத்துவது இப்போது மிகவும் எளிதானது.

சைபர் குற்றம் நடைமுறையில் ஒரு சேவையாக வழங்கப்படுகிறது.

பாதுகாப்பு இல்லாமல் இணையத்தில் செல்லும் ஒரு கணினியை ஐந்து நிமிடங்களுக்குள் கண்டுபிடித்து ஹக் செய்யலாம்.

பெரும்பாலான தாக்குதல்கள் எங்கிருந்து வருகின்றன என்பது குறித்து அவர் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால் சைபர் குற்றவாளிகள் உலகம் முழுவதும் பரவியுள்ளனர் என்று கூறினார்.

பணம் பறிக்க.அவர்கள் வீடுகளில் இருந்தும், அலுவலகங்களிலிருந்தும் செயல்படுகிறார்கள்.

அதிகரித்து வரும் இந்த அச்சுறுத்தல் காரணமாக, சைபர் தாக்குதல்களுக்கு எதிரான பாதுகாப்பில் அதிகளவில் முதலீடு செய்யப்படுகிறது.

சுவிஸ்காம் மத்திய அரசு, இராணுவம் மற்றும் உளவுத்துறை சேவையுடன் பரஸ்பர தகவல்களுக்காக நெருங்கிய தொடர்பில் உள்ளது.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles