Zug அருகே Oberwil இல் உள்ள Artherstrasseஇல் வியாழக்கிழமை மதியம், லொறி மோதியதில் பாதசாரி ஒருவர் உயிருக்கு ஆபத்தான காயங்களுக்கு உள்ளாகியிருந்தார்
43 வயதான அந்த நபர் வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் இறந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
விபத்துக்கான காரணம் குறித்த விசாரணைகள் இன்னும் நடந்து வருகின்றன.
மூலம்- 20min