தகவல் தொழில்நுட்ப கோளாறினால்,இன்று பிற்பகல் ஜெனீவா விமான நிலையத்தின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டன.
இதனால் கணிசமான தாமதங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன என்று, ஜெனீவா விமான நிலைய பேச்சாளர் கூறினார்.
ஏற்கனவே ஜெனிவா விமான நிலையத்தை நோக்கி வந்து கொண்டிருக்கும் விமானங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
இதனால் பயணிகள் தங்கள் விமான நிறுவனங்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றும் விமான நிலைய பேச்சாளர் கூறினார்.