Lucerne கன்டோனில் உள்ள Emmebbrücke இல் பெண் ஒருவரும் அவரது குழந்தையும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் பல்கனியில் நேற்றுக்காலை இவர்கள் சடலங்களாக மீட்கப்பட்டனர்.
குற்றவியல் விசாரணை அதிகாரிகள் இதனை கொலை என்று கருதுகின்றனர்.
கொலை தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
லூசெர்ன் பொலிஸ் சம்பவ இடத்தில் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
விசாரணை நடந்து வருவதால், தற்போது கூடுதல் விவரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை.
பெண்ணும் குழந்தையுமே தனியாக அந்த வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
நேற்றுமுன்தினம் அந்த பெண் 40 ஆவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
இறந்தவர்களுக்கும் கைது செய்யப்பட்டவருக்கும் எப்படி தொடர்பு இருந்தது என்பது இன்னும் தெரியவில்லை.
இறந்த இருவரினதும் அடையாளங்கள் வெளிப்படுத்தப்படவில்லை.
மூலம்- bluewin

