18.2 C
New York
Saturday, May 16, 2026

500 பேருடன் சுரங்கத்தில் சிக்கிய யூரோசிட்டி ரயில்.

சுமார் 500 பேரை ஏற்றிச் சென்ற யூரோசிட்டி ரயில் இன்று காலை முர்கெந்தால் சுரங்கப்பாதையில் சிக்கிக் கொண்டது. நீண்ட நேரத்திற்குப் பிறகு, தீயணைப்பு மற்றும் மீட்பு ரயிலில் அதிலிருந்த பயணிகள் பெர்னுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதன் விளைவாக அவர்களின் பயணம் சுமார் இரண்டு மணி நேரம் தாமதமானது. மேட்ஸ்டெட்டன் மற்றும் ரோத்ரிஸ்ட்டுக்கு இடையிலான பான் 2000 பாதையில் இடையூறு ஏற்பட்டதற்கான காரணம், தெளிவாகத் தெரியவில்லை.

பாசலில் இருந்து மிலன் செல்லும் EC 61 ரயில் காலை 7:15 மணிக்கு தடைப்பட்டதால், ஓல்டன் மற்றும் பெர்ன் இடையேயான காலை போக்குவரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

மற்ற ரயில்கள் பர்க்டார்ஃப் வழியாக பிரதான பாதையில் பயணித்தன. இதனால் சுமார் கால் மணி நேரம் தாமதம் ஏற்பட்டது.

காலை 9 மணிக்குப் பிறகு இடையூறு சரிசெய்யப்பட்டது. யூரோசிட்டி இறுதியில் ஓல்டனுக்குத் திரும்பியுள்ளது.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles