18.8 C
New York
Wednesday, September 10, 2025

17 வயதுடைய மாணவன் 15 நாட்களாக காணவில்லை

தனியார் உயர்கல்வி நிறுவனமொன்றில் பாடநெறி ஒன்றில் கலந்துகொள்வதற்காக சென்ற 17 வயதுடைய மாணவன் 15 நாட்களாக காணவில்லை

எவ்வாறாயினும், தனது 21 வயது காதலியுடன் கடலில் நீராட சென்ற போது கடலலையில் மாணவன் அடித்துச் செல்லப்பட்டதாக காதலி பொலிஸாருக்கு தெரிவித்துள்ள போதும் உறவினர்கள் அது தொடர்பில் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.

காலி, வலஹந்துவ பகுதியைச் சேர்ந்த சேனுக தேஷான் என்ற மாணவனே மார்ச் 18ஆம் திகதி முதல் காணவில்லை .

தனியார் உயர்கல்வி நிறுவனத்தில் பாடநெறி ஒன்றில் கலந்து கொள்வதாக அம்மாவிடம் கூறிவிட்டு அன்று காலை வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார்.

தனது காதலியின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக 17 வயதான சேனுக அன்று மாலையில் காதலியுடன் காலி ஜங்கள் கடற்கரைக்கு சென்றது பின்னர் தெரியவந்தது.

ஜங்கள் கடற்கரையில் தங்கிவிட்டுத் திரும்புவதற்குத் தயாராகிக் கொண்டிருந்த வேளையில் திடீரென ஏற்பட்ட அலையினால் இருவரும் கடலில் அடித்துச் செல்லப்பட்டதாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.

அதில், தான் உயிர் பிழைத்ததாகவும் ஆனால் தனது காதலன் நீரில் மூழ்கியதாகவும் அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Related Articles

Latest Articles