27.8 C
New York
Thursday, August 20, 2026

சீன ஜனாதிபதியின் விமானத்தை வழிமறித்த சுவிஸ் போர் விமானங்கள்.

சுவிஸ் விமானப்படையின் வழக்கமான நடவடிக்கை சீனாவுடன் இராஜதந்திர பதற்றங்களுக்கு வழிவகுத்துள்ளது.

சுவிட்சர்லாந்தின் மீது பறந்த சீன அரசு விமானத்தை இரண்டு F/A-18 போர் விமானங்கள் வழிமறித்து கட்டுப்பாட்டில் கொண்டு வந்தன.

அந்த விமானத்தில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் இருக்கிறார் என்பது அவர்களுக்குத் தெரியாது.

2024 நவம்பர் 22, ஆம் திகதி இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

கசாபிளாங்காவிலிருந்து புறப்பட்ட ஏர் சீனா போயிங் 747, விமானம், சுவிட்சர்லாந்தின் மீது  பறந்து கொண்டிருந்த போது சுவிஸ் போர் விமானங்கள் அதனை வழிமறித்து ஆய்வு செய்தன.

விமானத் தரவு வான்வழிப் பயண அங்கீகாரங்களுடன் பொருந்துகிறதா என்பதைச் சரிபார்க்க சுவிஸ் விமானப்படை ஒரு வழக்கமான சோதனையை மேற்கொண்டது.

இந்த சோதனை சுவிஸ் விமானப்படைக்கு ஒரு நிலையான பணியாகும், வருடத்திற்கு 200 முறை மேற்கொள்ளப்படுகிறது.

அறிவிக்கப்படாத இந்த ஆய்வு சீன அதிகாரிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

பெர்னில் உள்ள சீனத் தூதரகத்தின் பொறுப்பாளர் மாவோ ஜுன், சுவிஸ் விமானப்படைத் தலைவர் பீட்டர் மெர்ஸை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இரவு நேர நடவடிக்கை குறித்து புகார் அளித்தார்.

எனினும் விமானப்படைத் தளபதி மெர்ஸ் அந்தக் குற்றச்சாட்டை நிராகரித்து, இது சுவிஸ் விமானப்படையின் ஒரு ஒழுங்கான நடவடிக்கை என்று வலியுறுத்தியிருந்தார்.

இதன்பின்னர் சுவிஸ் அரசாங்கம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சீன அதிகாரிகள் கோரினர்.

ஆனால் பாதுகாப்பு அமைச்சர் வயோலா ஆம்ஹெர்டோ அல்லது சுவிஸ் கூட்டமைப்பின் தற்போதைய தலைவர் கரின் கெல்லர்-சுட்டரோ அந்த அழுத்தத்துக்கு அடிபணியவில்லை.

மூலம்- bluewin

Related Articles

Latest Articles