Grand-Saconnex இல் போதைப்பொருள் வலையமைப்பு ஒன்றைச் சேர்ந்த பலரை ஜெனிவா பொலிசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் கிறீன் கட்சியின் உறுப்பினரும் நகர கவுன்சில் உப தலைவரும் அடங்கியுள்ளார்.
கடந்த புதன்கிழமை Grand-Saconnex மாவட்டத்தில் இந்த பொலிஸ் நடவடிக்கை இடம்பெற்றது.
இதன்போது பலத்த வெடிச்சத்தம் கேட்டதாகவும், பொலிசாரால் கட்டிடத்திலிருந்து பலர் வெளியே அழைத்துச் செல்லப்பட்டதைக் கண்டதாகவும் அருகில் வசிப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த தேடுதலின் போது, கோகைன், எம்டிஎம்ஏ, எக்ஸ்டசி, கெட்டமைன், கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் மற்றும்100,000 சுவிஸ் பிராங்குக்கும் அதிகமான பணத்தையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர், கிறீன் கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராவார்.
சாரணைக்கு முந்தைய காவலில் வைக்கப்பட்ட அவர், தனது குடும்ப உறுப்பினருடன் சேர்ந்து, குற்றம்சாட்டப்பட்ட வலையமைப்பின் இயக்கத்தில் பங்கேற்றதாக சந்தேகிக்கப்படுகிறது.
அவர் 2015 முதல் நகராட்சி உறுப்பினராக இருந்து வருகிறார்.
ஞாயிற்றுக்கிழமை அவர் மக்களால் மீண்டும் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஒன்பது பேரை பொலிசார் கைது செய்தனர்.
இவர்கள் மாகாணத்தில் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பாக செயற்பட்டுள்ளனர்.
மூலம்- swissinfo

