Worb இல் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் அறையில் ஏற்பட்ட தீவிபத்தில், பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று முற்பகல் 10.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
- Advertisement -

தீயணைப்பு பிரிவினர் சென்று தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அவர்கள் அந்த வீட்டில் இருந்து, பெண் ஒருவரின் சடலத்தை மீட்டுள்ளனர்.
சடலத்தை அடையாளம் காணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மூலம்- bluewin


