அலாஸ்காவில் தொலைதூர பனி ஏரி ஒன்றில் விழுந்து அரைவாசி மூழ்கிப் போன விமானத்தின் இறக்கையில் 12 மணிநேரமாக உயிருக்குப் போராடிய மூவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் தெற்கு அலாஸ்காவில், Piper PA-12 Super Cruiser விமானம் ஒன்று விமானியான தந்தையும் இரண்டு குழந்தைகளுடன் சென்ற போது, கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை விபத்துக்குள்ளானது.
பனியில் உறைந்து போயுள்ள Tustumena ஏரியில் விழுந்த அந்த விமானத்தில் பாதிப் பகுதி நீருக்குள் மூழ்கிய நிலையில், அதிலிந்த, தந்தையும் இரு குழந்தைகளும், வெளியேறி, விமானத்தின் இறக்கையில் அமர்ந்திருந்தனர்.
விமானம் ஏரிக்குள் மூழ்கும் ஆபத்துக்கும், கடும் குளிருக்கும் மத்தியில் அவர்கள் இரவைக் கழிக்க நேரிட்டது.
பேஸ்புக்கில் அவர்கள் தமது நிலை பற்றி பதிவிட்டதை அடுத்து, திங்கட்கிழமை காலை பல விமானிகள் அவர்களைத் தேடத் தொடங்கினர்.
சுமார் 12 மணிநேரத்திற்குப் பின்னர், அவர்களை விமானம் ஒன்று கண்டுபிடித்து. மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆபத்தான நிலையில் இருந்த அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மூலம்- bluewin