நாளை புதன்கிழமை முதல், சுவிஸ் பயணிகள் பிரித்தானியாவிற்குச் செல்வதற்கு கடவுச்சீட்டு மாத்திரம் போதாது.
சுவிட்சர்லாந்திலிருந்து வரும் பயணிகள், மின்னணு பயண அங்கீகாரமும் (ETA) பெற்றிருக்க வேண்டும்.
இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்வதற்கு மின்னணு பயண அங்கீகாரமும் அவசியமாகும்.
இதனைப் பெற்றுக் கொள்வதற்கு 11.50 பிராங் செலவாகும். இந்த நுழைவு அனுமதி இரண்டு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். அதன் பிறகுபுதுப்பிக்கப்பட வேண்டும்.
இந்த அனுமதியை ஒரு செயலி அல்லது இணைய வழியாக பெற முடியும்.
ஏப்ரல் 9 ஆம் திகதி முதல், ETA க்கு 16 பவுண்ட்ஸ் செலவாகும்.
இந்த அனுமதி இல்லாமல் பயணம் செய்யும் எவருக்கும் விமான நிறுவனங்கள் விமானத்தில் ஏற மறுக்கப்படும்.
பயண அனுமதியின் போது, பின்வரும் கேள்விகளுக்கும் பதிலளிக்கப்பட வேண்டும்.
உங்களுக்கு வேலை இருக்கிறதா?
நீங்கள் எப்போதாவது ஒரு குற்றச் செயலுக்காக தண்டிக்கப்பட்டிருக்கிறீர்களா?
நீங்கள் எப்போதாவது பின்வரும் குற்றங்களில் ஏதேனும் ஒன்றில் ஈடுபட்டிருக்கிறீர்களா அல்லது பின்வரும் குற்றங்களில் ஏதேனும் ஒன்றைச் செய்ததாக சந்தேகிக்கப்படுகிறீர்களா?
(போர் குற்றங்கள், இனப்படுகொலை அல்லது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், பயங்கரவாதம், ஒரு பயங்கரவாத அமைப்பை ஆதரிப்பது அல்லது அதில் உறுப்பினர் பதவியில் இருப்பது உட்பட, தீவிரவாத குழுக்களுக்கு ஆதரவு அல்லது தீவிரவாத கருத்துக்களை வெளிப்படுத்துவது) என்பனவே அவையாகும்.
மூலம்- swissinfo