சுவிட்சர்லாந்தில் 27 வீதமான கத்தோலிக்கர்கள் தேவாலயத்தை விட்டு வெளியேறுவது பற்றி யோசித்துள்ளனர் என்று Sotomo ஆராய்ச்சி மையத்தின் ஆய்வு தெரிவிக்கிறது.
அதேவேளை, சுவிசேஷ சீர்திருத்த சபையிலும், 21 வீதமானோர் இத்தகைய எண்ணத்தைக் கொண்டிருப்பதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
நேற்று சூரிச்சில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி, 71% கத்தோலிக்கர்கள் சமூக அர்ப்பணிப்பில் நேர்மறையானவர்களாக உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணக்கெடுக்கப்பட்டவர்களில் 18 வீதமானோர் வெளியேறுவதைக் கருத்தில் கொண்டுள்ளனர் என கடந்த டிசம்பரில் வெளியான அறிக்கை, கத்தோலிக்க திருச்சபைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மூலம்- swissinfo