14 வயது சிறுவன், ஓட்டிச் சென்ற ட்ராக்டர்,இரண்டு வாகனங்களின் மீது மோதி கவிழ்ந்த விபத்தில் பெண் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
புதன்கிழமை இரவு 8 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இரண்டு பொதிகளை ஏற்றும் இழுவை வாகனங்கள் மீது ட்ராக்டர் மோதிய பின்னர் கவிழ்ந்துள்ளது என ஆர்காவ் கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் அப்பகுதியில் வசிக்கும் இளம்பெண் படுகாயம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ட்ராக்டர் மற்றும் பிற வாகனங்கள் பொருள் சேதம் அடைந்தன.
சுவிட்சர்லாந்தில், 14 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் அதிகபட்சமாக மணிக்கு 30 கி.மீ வேகத்தில் விவசாய மற்றும் வனத்துறை மோட்டார் வாகனங்களை ஓட்டுவதற்கு G வகை ஓட்டுநர் அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம்.
இதனால் விவசாய நிலங்களில் சிறுவர்கள் இதுபோன்ற ட்ராக்டர்களை ஓட்டுவது வழக்கம்.
காவல் துறையினர் விபத்தின் சூழ்நிலைகளை விசாரித்து வருவதுடன் ஓட்டுநர் உரிமத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
மூலம்- 20min.