Valenserbergstrasse இல் உள்ள Brunnenberg இல் இருந்து Valens நோக்கி சென்று கொண்டிருந்த விவசாய வாகனத்தில் இருந்து விழுந்து தந்தையும் மகளும் படுகாயம் அடைந்துள்ளனர்.
புதன்கிழமை பிற்பகல், 34 வயதான பெண் ஒருவர் ஓட்டிச் சென்ற விவசாய வாகனத்திற்கு கதவுகள் இருக்கவில்லை என்று சென் கலன் கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.
34 வயதுடைய நபர் ஒருவர் தனது ஒரு வயது மகளை மடியில் வைத்துக் கொண்டு பயணிகள் இருக்கையில் அமர்ந்திருந்தார்.
வாகனம் ஓட்டும் போது, இன்னும் தெளிவாகத் தெரியாத காரணங்களுக்காக, அந்த நபரும் அவரது மகளும் வாகனத்திலிருந்து புல் மீது விழுந்து காயமடைந்தனர்.
மூலம்- 20min.