0.8 C
New York
Wednesday, February 25, 2026

அமெரிக்க வரிகள் சுவிஸ் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என எச்சரிக்கை.

அமெரிக்க வரிகள் சுவிஸ் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கலாம் என்று ETH Zurich இன் பொருளாதார ஆராய்ச்சி மையம் (KOF)  எச்சரித்துள்ளது.

பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான அதிக செலவு 0.5% வரை வருமான இழப்புக்கு வழிவகுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க நிர்வாகத்தின் வரிக் கொள்கையால் தூண்டப்பட்ட வர்த்தக பதற்றங்கள் சுவிட்சர்லாந்தின் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்திற்கு கணிசமான ஆபத்துக்களை ஏற்படுத்துகின்றன என்று புதன்கிழமை

சுவிஸ் ஏற்றுமதிகள் மீதான 31% வரிகளால், சுவிஸ் பொருளாதாரத்திற்கு 0.2% தொடக்கம் 0.6% இடையே உண்மையான வருமான இழப்புகள் ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வருமான இழப்புகளை மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) இழப்புகளாகக் காணலாம் என்று KOF கூறுகிறது.

ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய வர்த்தக பங்காளிகளுடன் ஒப்பிடுகையில், சுவிட்சர்லாந்து குறிப்பிடத்தக்க அதிக இழப்புகளை சந்திக்கும்.

மருந்து பொருட்கள் மீது கட்டணங்கள் விதிக்கப்பட்டால், உண்மையான வருமான இழப்புகள் கடுமையாக உயரும்” என்று KOF எச்சரிக்கிறது.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles