24.3 C
New York
Thursday, August 20, 2026

சுவிட்சர்லாந்துக்கான வரியை இடைநிறுத்தினார் ட்ரம்ப்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சுவிட்சர்லாந்து உள்ளிட்ட சில நாடுகளுக்கு விதித்திருந்த பரஸ்பர வரியை 90 நாட்களுக்கு இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளார்.

அவர் அண்மையில் சுவிசுக்கு 31 வீத வரி அறவிடப்படும் என அறிவித்திருந்தார்.

இதேபோன்று பல நாடுகள் அமெரிக்காவுக்கு எதிராக பதில் வரிகளை அறிவித்திருந்தனர்.

சீனாவும் பதிலுக்கு 34 வீத வரியை அறிவித்த போது. அதனை நீக்காவிட்டால், மேலும் 50 வீதம் வரி விதிக்கப்படும் என எச்சரித்திருந்தார்.

அதன்படி சீனாவுக்கு 125 வீத வரி விதிக்கப்படுவதாக அறிவித்துள்ள ட்ரம்ப், சுவிஸ் உள்ளிட்ட சில நாடுகளுக்கான வரியை 90 நாட்களுக்கு இடைநிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளார்.

ட்ரம்பின் வரியை அடுத்து சீனாவும் 84 வீத வரியை அறிவித்துள்ளது.

இதனால் சர்வதேச அளவில் பங்குச் சந்தைகள் சரிவை சந்தித்துள்ளன. தங்கத்தின் விலை, எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ளன. பொருளாதாரம் தள்ளாட ஆரம்பித்துள்ளது.

மூலம்-20min

Related Articles

Latest Articles