Winterthur இல் உள்ள Rudolfstrasse இல், இரண்டு சைக்கிள்கள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது.
இந்த விபத்தில் தலையில் காயம் அடைந்த 72 வயதுப் பெண், 5 நாட்கள் கழித்து மருத்துவமனையில் நேற்று மரணமானார்.
அதேவேளை இவரது சைக்கிளுடன் மோதிய 39 வயதுடைய பெண் காயங்களின்றி தப்பியுள்ளார் என Winterthur பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மூலம்- 20min.

