சந்தேகத்திற்கிடமான வாகனம் ஒன்றை துரத்திச் சென்ற பொலிஸ் வாகனம் விபத்துக்குள்ளானதில் 2 பொலிசார் காயம் அடைந்தனர்.
சூரிச் மாவட்டம் 6இல் செவ்வாய்கிழமை இரவு 10.45 மணியளவில், இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சந்தேகத்திற்கிடமான முறையில் வாகனம் செல்வதாக ஒருவர் அளித்த தகவலை அடுத்து, ஒரு பொலிஸ் ரோந்து வாகனம் அந்த வாகனத்தைக் கண்டறிந்து அதை தடுத்து நிறுத்த முயன்றது.
இருப்பினும், அதன் பெண் ஓட்டுநர் நிறுத்தவில்லை.
பின்னர், அந்த வாகனம் பொலிஸ் ரோந்து வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இரண்டு போலீஸ் அதிகாரிகள் காயம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இரண்டு வாகனங்களும் பலத்த சேதம் அடைந்தன.
விபத்தின் சரியான சூழ்நிலை குறித்து சூரிச் பொலிசார் விசாரித்து வருகின்றனர்.
மூலம்- 20min.

