0.8 C
New York
Wednesday, February 25, 2026

ட்ராமில் ஏற முயன்ற மூதாட்டி கீழே விழுந்து மரணம்.

ட்ராமில் ஏற முயன்ற மூதாட்டி ஒருவர் கீழே விழுந்து ட்ராமில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் செவ்வாய்கிழமை மாலை, 4:30 மணியளவில்,  ரெய்னாச் இல் உள்ள Landererstrasse டிராம் நிறுத்தத்தில் இடம்பெற்றுள்ளது.

87 வயதான பெண் பாசெல் நோக்கி பயணித்த டிராம் லைன் 11 இல் ஏறுவதற்காக கதவைத் திறக்க முயற்சிக்கையில், டிராம் தடங்களில் விழுந்தார்.

டிராம் நகர்ந்த போது, அவர் பல மீட்டர் இழுத்துச் செல்லப்பட்டு, பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்தின் சரியான சூழ்நிலையை தெளிவுபடுத்துவதற்கு Basel-Landschaft பொலிசார் சாட்சிகளைத் தேடி வருகின்றனர்.

மூலம்- 20min

Related Articles

Latest Articles