11.2 C
New York
Sunday, May 3, 2026

கன்டோனல் நாடாளுமன்றத்திற்கு அச்சுறுத்தல் விடுத்தவர் கைது.

Basel-Stadt கன்டோனல் நாடாளுமன்றத்திற்கு அச்சுறுத்தல் விடுத்ததாக சந்தேகிக்கப்படும் குற்றவாளியை அடையாளம் கண்டு, 9, ஆம் திகதி புதன்கிழமை  கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

18 வயதான சுவிஸ் நபர் கடந்த சில நாட்களாக, கிராண்ட் கவுன்சிலில் துப்பாக்கிச் சூடு நடத்துவதாக மிரட்டி வந்துள்ளார் என சந்தேகிக்கப்படுகிறது.

டிஜிட்டல் குற்றப் பிரிவின் வல்லுநர்கள், சோலோதர்ன் மாகாணத்தில் வசிக்கும் அந்த நபரை சந்தேகத்திற்குரிய குற்றவாளி என அடையாளம் கண்டுள்ளனர்.

பெர்ன் கன்டோனல் பொலிசார் அவரை லாங்கேந்தலில் கைது செய்து பாஸல்-ஸ்டாட் அரசு வழக்கறிஞர் அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளது.

தற்போது நடைபெற்று வரும் விசாரணைகள் மற்றும் காவல்துறையின் தந்திரோபாய காரணங்களுக்காக, மேலதிக தகவல்களை வழங்க முடியாது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்- 20min

Related Articles

Latest Articles