21.5 C
New York
Saturday, June 20, 2026

ரயில் நிலையத்தில் குழு மோதல் -இருவருக்கு கத்திக்குத்து.

Solothurn பிரதான ரயில் நிலையப் பகுதியில் புதன்கிழமை மாலை  இரு குழுக்களிடையே நடந்த மோதலில் இரண்டு பேர் வெட்டுக் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இரவு 8 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, பொலிஸ் ரோந்து மற்றும் அவசர சேவைகள் உடனடியாக சட்பவ இடத்திற்குச் சென்றன.

அங்கு 15 வயது மற்றும் 22 வயதுடைய சிரிய இளைஞர்கள் இருவர் கத்திக் குத்து காயங்களுடன் காணப்பட்டனர்.

துணை மருத்துவர்களால் அவர்கள் ஆரம்ப மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மோதலில் ஈடுபட்ட இரண்டு குழுக்களைப் பற்றிய கூடுதல் தகவல்களை வழங்க முடியாது என பொலிசார் தெரிவித்தனர்.

மூலம்- 20min

Related Articles

Latest Articles