சுவிசில் 5ம் நிலை எச்சரிக்கைகளுக்கு வழிவகுத்த கனமழை முடிவுக்கு வந்துள்ளதுடன், எச்சரிக்கைகள் நேற்று மாலையுடன் நீக்கப்பட்டுள்ளது.
வாலைஸ் மற்றும் பெர்னீஸ் ஓபர்லேண்ட் பகுதிகளால் கனமழையினால் பாதிக்கப்பட்டன.
புதன்கிழமை, சில வரலாற்று ரீதியான மழைப்பொழிவு பதிவுகள் முறியடிக்கப்பட்டுள்ளன.
லுகர்பாத்தில், 118.8 மிமீ மழை பெய்துள்ளது. வானிலை ஆய்வாளர்களின் கூற்றுப்படி, இத்தகைய அளவில் மழைப்பொழிவு 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நிகழ்கின்றன.
இந்த வானிலை மழையை மட்டுமல்ல, குறைந்த உயரத்தில் கூட கடுமையான பனிப்பொழிவையும் கொண்டு வந்தது.
விஸ்பில் 30 செ.மீ, சியோனில் 9 செ.மீ.. கிரேட் சென் பெர்னார்ட் பாஸ் போன்ற அதிக உயரத்தில், ஒரே நாளில் 100 செ.மீ வரை பனி பதிவாகியுள்ளது.
உள்ளூரில், ஏப்ரல் மாதத்திற்கான சாதனை அளவுகள் எட்டப்பட்டுள்ளன.
மொன்டானாவில் (58 செ.மீ) மற்றும் அடெல்போடனில் (52 செ.மீ).
இதேபோன்ற ஒரு சூழ்நிலை கடைசியாக 1976 ஏப்ரலில் ஏற்பட்டது.
இந்த நிலையில் இன்று புனித வெள்ளி தினம், மேகமூட்டத்துடன் தொடங்கும், சில இடங்களில் காலையில் லேசான மழை பெய்யும்.
மதியத்திற்குப் பின் மேற்கிலிருந்து மேகங்கள் மறைந்து வெயில் அதிகமாக இருக்கும்.
காலையில் வெப்பநிலை 6 டிகிரி செல்சியஸாகவும், மதியம் 11 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். உறைபனி இருக்கும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மூலம்- 20min.