16.9 C
New York
Thursday, September 11, 2025

வாலைஸ் இல் சிறப்பு சூழ்நிலை அறிவிப்பு.

கடுமையான புயல் மற்றும் பனிப்பொழிவு காரணமாக, வாலைஸ் மாகாணத்தில் சிறப்பு சூழ்நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மாட் மற்றும் ஓபெரெம்ஸ் போன்ற இடங்கள் வெளி உலகத்திலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளன.

பெர்னீஸ் ஓபர்லேண்டில் உள்ள பல கிராமங்களுக்கு மின்சார விநியோகம், தொலைத்தொடர்பு என்பன துண்டிக்கப்பட்டுள்ளது.

நேற்று ஈஸ்டர் விடுமுறைக்காக வாலைஸுக்குச் செல்ல திட்டமிட்டிருந்த மக்கள்,  தமது பயணத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டது.

வாலைஸ் மாகாணத்தில், ஏராளமான வீதிகள் இன்னும் மூடப்பட்டுள்ளன.

A9 இல் உள்ள சிம்ப்லான் கடப்பு வீதி மறு அறிவிப்பு வரும் வரை இரு திசைகளிலும் மூடப்பட்டுள்ளது.

மேட்டர் பள்ளத்தாக்கில், ஸ்டால்டன் மற்றும் சென் நிக்லஸ் இடையே இரு திசைகளிலும், அதே போல் ட்ராஷ் மற்றும் ஜெர்மாட் இடையேயும் கன்டோனல் சாலையும் மூடப்பட்டுள்ளது.

சாஸ் பள்ளத்தாக்கில் உள்ள கன்டோனல் சாலை ஸ்டால்டன் மற்றும் சாஸ்-கிரண்ட் இடையே இரு திசைகளிலும், சாஸ்-கிரண்ட் மற்றும் சாஸ்-அல்மகெல் இடையேயும், சாஸ்-கிரண்ட் மற்றும் சாஸ்-ஃபீ இடையேயும் இரு திசைகளிலும் மூடப்பட்டுள்ளது.

லோட்சென்டலில், கோபன்ஸ்டீன் மற்றும் பிளாட்டன் இடையேயான கன்டோனல் சாலை இரு திசைகளிலும் மூடப்பட்டுள்ளது.

பிரிக் பான்ஹோஃப்பிளாட்ஸ் மற்றும் ஓபர்வால்ட் இடையேயான  பாதையில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளன. மாற்று பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles