வாலைஸ் மாகாணத்தில், கடுமையான பனிப்பொழிவு முடிவுக்கு வந்துள்ள போதும், அங்கு நிலைமை இன்னமும் மோசமாகவே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிம்ப்ளான் பாஸ் மற்றும் விஸ்ப்-ஜெர்மாட் ரயில் பாதை உட்பட பல வீதிகள் மூடப்பட்டுள்ளன.
பனிச்சரிவு ஆபத்து அதிகமாக உள்ளதால், மக்கள் நடமாட்டத்தைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சாஸ் பள்ளத்தாக்கு மற்றும் மேட்டர் பள்ளத்தாக்கில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
500க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் 170 போக்குவரத்து உள்கட்டமைப்பு ஊழியர்கள் பணியில் உள்ளனர்.
மூலம்- 20min.