கடுமையான உறைபனி மற்றும் மழையினால் மின்விநியோகம் தடைப்பட்டிருந்த Zermatt இற்கு மீண்டும் மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது.
பனிப் பொழிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலைமை மெதுவாகவே வழமைக்கு திரும்புகிறது.
இன்னமும் பல வீதிகள் மூடப்பட்ட நிலையிலேயே உள்ளன. சில வீதிகள் திறக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பல வாகனங்கள் பயணம் செய்ய முடியாமல் சுரங்கப் பாதைகளுக்கள் பல மணிநேரமாக சிக்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை ஈஸ்டர் ஞாயிறு விடுமுறையைக் கொண்டாட விரும்பியவர்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் இருக்கின்றனர்.
மூலம்- 20min