சூரிச் விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமானங்களில், ஏர் செர்பியாவின் விமானங்கள் அதிக தாமதங்களைக் கொண்டுள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
ஏர் செர்பியாவின் மூன்றில் ஒரு விமானம் 30 நிமிடங்களுக்கு மேல் தாமதமாக புறப்படுகிறது.
TAP போர்ச்சுகல் மற்றும் துருக்கிய விமான நிறுவனங்களான பெகாசஸ், சன்எக்ஸ்பிரஸ் மற்றும் துருக்கிய ஏர்லைன்ஸ் ஆகிய விமான நிறுவனங்கள் அடுத்த இடங்களை பிடித்துள்ளன.
அதேவேளை, சூரிச்சிலிருந்து அதிக விமானங்களை இயக்கும் சுவிஸ் ஏர் விமானங்களில் 19 சதவீதம் தாமதமாகின்றன.
வானிலை அல்லது வேலைநிறுத்தங்கள் காரணமாக லுஃப்தான்சா, கேஎல்எம் மற்றும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஆகியவை அதிக ரத்து செய்தல்களைக் கொண்டுள்ளன என்றும் கடந்த இரண்டு ஆண்டுகளில் விமானப் பயணங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
மூலம்- 20min