சூரிச்சில் உள்ள ஸ்டேடல்ஹோஃபென் ரயில் நிலையம் நேற்று மூடப்பட்டதால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
ஸ்டேடெல்ஹோஃபென் ரயில் நிலையம் திடீரென பொலிசாரால் சுற்றி வளைக்கப்பட்டதுடன், எந்த ரயில்களும் ஓடவில்லை.
ஒரு “வெளிப்புற சம்பவம்” தான் இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மாலை வரை ரயில் போக்குவரத்து தடைபட்டது.
ஏராளமான பொலிசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டிருந்தனர்.
S3, S5, S6, S7, S9, S11, S12, S15, S16, S20 மற்றும் S23 ஆகிய வழித்தடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மூலம்- 20min.