சென் கலனில் உள்ள Engelburgஇல் பஸ் நிறுத்தம் மீது விநியோக வான் ஒன்று மோதியுள்ளது.
புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
திடீரென சத்தம் கேட்டு எழுந்த அயலில் வசிப்பவர்கள், விபத்துக்குள்ளான வானில் இருந்த ஓட்டுநர் காயமின்றி இருப்பதைக் கண்டனர்.
பொலிசார் வருவதற்கும் அவர் தப்பிச் சென்றுள்ளார்.
எனினும், பின்னர் பொலிசாரால் 39 வயது ஓட்டுநர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
மூலம்-20min

