20.1 C
New York
Wednesday, September 10, 2025

போக் எரிப்புக்கு தயார் நிலையில் சூரிச்.

சூரிச்சில் போக் (Böögg) எரிப்புக்கான ஏற்பாடுகள்  இன்று காலை தொடங்கியுள்ளன.

கடந்த ஆண்டு வானிலை காரணமாக, செக்செலூட்டனின் சிறப்பம்சமான இந்த நிகழ்வை ரத்து செய்யப்பட்டது.

வசந்தகால விழாவின் சிறப்பம்சமான இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகள், திங்கட்கிழமை காலை செக்செலூட்டன்பிளாட்ஸில் முழு வீச்சில் நடைபெற்றன.

பனிமனிதனின் கீழ் பெரிய மரக் குவியல் அமைக்கப்படும் .

மாலை 6 மணிக்கு போக்கின் டைனமைட் நிரம்பிய தலை எவ்வளவு வேகமாக வெடிக்கிறதோ, அவ்வளவு வெப்பமான கோடை காலம் நீடிக்கும் என்பது நம்பிக்கையாகும்.

கடந்த ஆண்டு, பலத்த காற்று வீசியதால் இந்த நிகழ்வு ரத்து செய்யப்பட வேண்டியிருந்தது.

பின்னர் ஜூன் மாதம் அப்பென்செல் அவுட்டர் ரோடனின் மாகாணத்தில் கொட்டும் மழையில் நடைபெற்றது.

இந்த ஆண்டு, வானிலை முன்னறிவிப்பின்படி, இது எந்தத் தடையும் இல்லாமல் நடைபெறும்.

மூலம்-swissinfo

Related Articles

Latest Articles