18.8 C
New York
Wednesday, September 10, 2025

சூரிச்சில் பாரிய பொலிஸ் நடவடிக்கை- பலர் கைது.

சூரிச்சில் உள்ள மாவட்டம் 5 இல் நேற்று நண்பகல் ஒரு பாரிய பொலிஸ் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

Neugasshof bar முன்பாக, பல ரோந்து கார்கள் மற்றும் சிறப்பு வாகனங்கள் பயன்பாட்டில் காணப்பட்டன.

சூரிச் நகர காவல்துறையினர் சோதனை நடத்தியதுடன். குறைந்தது ஒருவரை சாதாரண உடையில் இருந்த பொலிசார் அழைத்துச் சென்றனர்.

அதேவேளை பலர் கைது செய்யப்பட்டு கைவிலங்கிடப்பட்டு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் அலுவலகத்தின் உத்தரவுக்கு அமைய இந்த தேடுதல் நடத்தப்பட்டதாக சூரிஸ் பொலிஸ் தெரிவித்துள்ளது.

எனினும் மேலதிக விபரங்கள் வெளியிடப்படவில்லை.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles