26.8 C
New York
Monday, July 14, 2025

முதியோர் இல்லத்தில் பெண் கொலை- கணவனும் சடலமாக மீட்பு.

Lyssஇல் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் வசித்து வந்த பெண், தனது அறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு இதுபற்றி பெர்ன் கன்டோனல் பொலிசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவசர சேவைகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அவரது மரணம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இறந்தவர் பெர்ன் கன்டோனைச் சேர்ந்த 70 வயது சுவிஸ் பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஆரம்ப விசாரணைகளில், இந்த சம்பவம் ஒரு கொலை என்று கருதப்படுகிறது.

இறந்தவரின் கணவர் மீது சந்தேகம் எழுந்த நிலையில், அவர்,  திங்கட்கிழமை பிற்பகல் Lyssஇல்  இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

பெர்ன் கன்டோனைச் சேர்ந்த 71 வயது அந்த சுவிஸ் நபர், தனது உயிரை மாய்த்திருக்கலாம் என கருதப்படுகிறது.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles