Pöschwies சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
57 வயதான அந்தக் கைதி அவரது சிறைக் கூண்டில் இறந்த நிலையில் காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் அவரது மரணம் குறித்து விசாரணைகளை தொடங்கியுள்ளதாக Winterthur/Unterland சட்டமா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் மூன்றாவது தரப்பு தொடர்புபட்டிருப்பதற்கான எந்த தடயங்களும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை விட்ஸ்வில் சிறைச்சாலையில் இதே போன்று திங்கட்கிழமை ஒரு கைதி சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
மூலம்- 20min.