கனடிய நாடாளுமன்றத்திற்கு முதன்முறையாக தமிழ் பூர்வீகத்தைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர்.
கனேடிய பொதுத்தேர்தலில் இலங்கை தமிழ் பூர்வீகத்தைச் சேர்ந்த ஐந்து தமிழ் கனடியர்கள் போட்டியிட்டனர்.
அவர்களில் ஹரி ஆனந்தசங்கரி, யுவனிதா நாதன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
இந்திய தமிழ் பூர்வீகத்தைக் கொண்ட அனிதா ஆனந்த்தும் ஆளும் கட்சியான லிபரல் கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
கனேடிய நீதி அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி ஸ்கார்பாரோ – கில்ட்வுட் – ரூஜ் பார்க் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
அதேபோல ஆளும்கட்சியில் இருந்து யுவனிதா நாதன் பிக்கரிங் – புரூக்ளின் தொகுதியிலும் களம் இறங்கியிருந்தார்.
Oakville கிழக்கு தொகுதியில் அனிதா ஆனந்த் போட்டியிட்டிருந்தார்.