St. Gallen கன்டோனில் உள்ள Waldkirch, இல் கிரேனில் இருந்து விழுந்த விவசாயி உயிரிழந்துள்ளார்.
Lake Egelsee அருகே உள்ள விவசாயப் பண்ணையில் செவ்வாய்க்கிழமை மாலை 7 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விவசாயி வைக்கோலை கிரேன் மூலம் உயரமான இடத்தில் குவிக்க முயன்ற போது கிரேனில் இருந்து தவறி விழுந்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் 73 வயதான அவர் சம்பவ இடத்திலேயே மரணமானார்.
மூலம்- bluewin

