19.4 C
New York
Sunday, May 17, 2026

தீக்கிரையான அடுக்குமாடிக் குடியிருப்புகள்.

Zurich இல் உள்ள  Bassersdorf இல், நேற்று மாலை 6.15 மணியளவில் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் பரவிய தீவிபத்தினால் பெருமளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

முதலில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் பல்கனியில் தீப்பற்றிய நிலையில் அது விரைவாக 2அவது 3ஆவது மாடிகளுக்கும் பரவியது.

அங்கிருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இதனால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

இந்த தீவிபத்தினால் 3 அடுக்குமாடிக் குடியிருப்புகளும் பலத்த சேதம் அடைந்துள்ளன.

தீயணைப்பு பிரிவினர் கடுமையாக போராடி தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

மூலம்- 20min

Related Articles

Latest Articles