ஆர்காவ் மாகாணத்தின் ப்ரூக் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் செவ்வாய்க்கிழமை இரவு, துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்தது.
இரவு 10 மணிக்கு அங்கு சென்ற காவல்துறை ரோந்துப் படையினர், துப்பாக்கிக் காயத்துடன் ஒருவரைக் கண்டனர். அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அந்த சுவிஸ் நாட்டவருக்கு 36 வயது.
- Advertisement -

குற்றவாளிகளைத் தேடும் ஒரு பெரிய அளவிலான தேடுதல் வேட்டை தொடர்ந்தது. புதன்கிழமை மதியம், 38 வயதான துனிசிய நாட்டைச் சேர்ந்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஆர்காவ் மாகாண காவல்துறையின்படி, அவர் இந்தக் கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என்ற வலுவான சந்தேகம் உ்ள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்-


