18.1 C
New York
Friday, October 9, 2026

சுவிஸ் கால்பந்து அணி கப்டன் கிரானிட் ஷாகாவிற்கு 2 ஆண்டுகள் நன்னடத்தை தண்டனை.

கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் போலி தடுப்பூசி சான்றிதழைப் பெற்றதை ஒப்புக்கொண்டதை அடுத்து, சுவிஸ் தேசிய கால்பந்து அணியின் கப்டன் கிரானிட் ஷாகாவிற்கு இரண்டு ஆண்டுகள் நன்னடத்தை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், லூசெர்ன் அரசு வழக்கறிஞர் அலுவலகத்தால் அவருக்கு தலா 3,000 பிராங் வீதம் 50 தினசரி அபராதங்களும் விதிக்கப்பட்டுள்ளன.

- Advertisement -

சுவிஸ் தேசிய அணியின் கப்டன் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் இதை அறிவித்துள்ளார்.

“நான் இந்த முடிவை ஏற்றுக்கொள்கிறேன், பொறுப்பேற்கிறேன்,” என்று 34 வயதான ஷாகா அந்தப் பதிவில் எழுதியுள்ளார்.

இந்தக் காலகட்டத்தில் 34 வயதான அவர் வேறு எந்தக் குற்றங்களையும் செய்யாத பட்சத்தில், இந்தத் தண்டனை அமுல்படுத்தப்படாது.

அரசு வழக்கறிஞர் அலுவலகத்தில் முழுமையான வாக்குமூலம் அளித்துள்ளதாகவும், சட்டச் செலவுகளை ஏற்கனவே செலுத்தி விட்டதாகவும், தீர்ப்பை ஏற்றுக்கொண்டதாகவும் ஷாகா மேலும் கூறினார்.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles