சூரிச்சில் உள்ள இராணுவ முகாம் பகுதியைச் சுற்றி, இன்று அதிகாலை முகமூடி அணிந்த இடதுசாரி தீவிரவாதிகளுக்கும் பொலிசாருக்கும் இடையே மோதல்கள் இடம்பெற்றுள்ளன.
கொள்கலன்கள், இ-ஸ்கூட்டர்கள் மற்றும் பிற பொருட்களைப் பயன்படுத்தி இடதுசாரி தீவிரவாதிகள் வீதித் தடைகளை அமைத்துடன், பொருட்களை எரித்து தடைகளை ஏற்படுத்தினர்.
பொலிஸ் அதிகாரிகள் மீது கற்கள், கண்ணாடி போத்தல்கள் மற்றும் பட்டாசுகளை வீசினர்.
பெரும் எண்ணிக்கையான சூரிச் நகர பொலிசார், குவிக்கப்பட்டு, தண்ணீர் பீரங்கிகள், கண்ணீர் புகை மற்றும் ரப்பர் தோட்டாக்களைப் பயன்படுத்தி அவர்களுக்கு பதிலடி கொடுத்தனர்.
இன்று அதிகாலை வரை கலவரம் தொடர்ந்தது. சூரிச் தீயணைப்புத் துறையும் பணியில் ஈடுபட்டிருந்தது.
அதிகாலை 4 மணியளவில் இராணுவ முகாம் பகுதியை சுற்றியிருந்த தடைகளை பொலிசார் அகற்றினர்.
இந்த நடவடிக்கையின் போது, பொலிஸ் அதிகாரிகள் மீண்டும் கண்ணாடி போத்தல்களால் தாக்கப்பட்டனர்.
இதில், ஒரு பொலிஸ் அதிகாரி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மூலம்- 20min

