17.5 C
New York
Wednesday, September 10, 2025

வன்முறையற்ற பெற்றோர் கொள்கை- நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.

சுவிஸ் சட்டத்தில் வன்முறையற்ற பெற்றோர் கொள்கையை உள்ளடக்குவதற்கு ஆதரவாக நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை,  வாக்களித்துள்ளது.

இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக 134 பேரும், எதிராக 56 பேரும்  வாக்களித்தனர். 2 பேர் வாக்களிக்கவில்லை.

சட்டத் திருத்தத்திற்கு ஆதரவாக நிறைவேற்றப்பட்ட இந்தப் பிரேரணை இனி செனட் சபையில் சமர்ப்பிக்கப்படும்.

சுவிஸ் மக்கள் கட்சியின் சிறுபான்மையினர் இந்த பிரேரணையை  ஆதரிக்கவில்லை. இந்த நடவடிக்கை தேவையற்றது என்று அதன் பேச்சாளர் விவரித்தார்.

ஆனால் பெரும்பான்மையானவர்கள் அரசாங்கத்தின் முன்மொழிவுடன் உடன்பட்டனர்.

வன்முறையற்ற பெற்றோர் கொள்கை,  உடல் ரீதியான தண்டனை மற்றும் குழந்தைகளை இழிவுபடுத்தும் பிற வடிவங்களை ஏற்றுக் கொள்ளாது.

மூலம் – swissinfo

Related Articles

Latest Articles