20.1 C
New York
Wednesday, September 10, 2025

ஆரம்ப பாடசாலையில் தீவிபத்து- 200 பேர் பாதுகாப்பாக மீட்பு.

ஷியர்ஸ் ஆரம்ப் பாடசாலையில் ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து 200 பேர் வெளியேற்றப்பட்டனர்.

திங்கட்கிழமை பிற்பகல் 3 மணிக்கு இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

இரண்டாவது தளத்தில்  உள்ள வகுப்பறையில் இருந்து கரும் புகை வெளியான நிலையில், 180 மாணவர்களும் 20 ஆசிரியர்களும் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

புத்தகங்கள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் அடங்கிய கொள்கலனில் தீவிபத்து ஏற்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக கிராபண்டன் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles