சியோனில் திங்கட்கிழமை இடம்பெற்ற ஒரு தொழில் விபத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திங்கட்கிழமை பிற்பகல் 3:30 மணியளவில், சியோனில் உள்ள ரூ டெஸ் செட்ரெஸில் உள்ள ஒரு கட்டிடத்தின் சுவரில் இருந்து, ஒரு உலோகப் பலகையை அகற்றும் பணியில் இரண்டு பேர் ஈடுபட்டிருந்தனர்.
அவர்கள், ஏணிகளில் ஏறும்போது, இருவரும் சமநிலையை இழந்து தரையில் விழுந்தனர்.
இருவரும் ஆம்புலன்ஸ் மூலம் சியோன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அவர்களில் ஒருவரான 63 வயதான சுவிஸ் நபர் அங்கு காயங்களால் உயிரிழந்துள்ளார்.
மூலம் – 20min