தெற்கு நோக்கிச் செல்லும் A2 பாதையில் மணிக்கு 166.15 கிமீ வேகத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற ஒப்வால்டனைச் சேர்ந்த 25 வயது நபருக்கு 2 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்பட 18 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
லூசெர்ன் சிவிலியன் போலீஸ் ரோந்துப் பிரிவை குறித்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் வேகமாகச் முந்திச் சென்ற போது பிடிபட்டார்.
மணிக்கு 80 கிமீ வேக வரம்பைத் தாண்டி அவர், மேலதிகமாக 86.15 கிமீ வேகத்தில் பயணித்திருந்தார்.
நீதிமன்றம் 25 வயது நபரின் அலட்சியத்தை மிதமானதாக வகைப்படுத்தியதுடன், அவர் முற்றிலும் சுயநல நோக்கங்களுக்காகவே செயல்பட்டார் என்றும் தெரிவித்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர் குற்றத்தை ஒப்புக்கொண்டு நீதிமன்றத்துடன் ஒத்துழைக்கத் தயாராக இருந்தார். இது அவரது தண்டனையை சிறிது குறைத்தது.
நீதிபதி 25 வயது நபருக்கு இரண்டு வருடங்கள் நிறுத்தி வைக்கப்பட்ட 18 மாத சிறைத்தண்டனையை விதித்துள்ளது. அத்துடன் 200 பிராங் அபராதமும் விதிக்கப்பட்டது.
மூலம்- 20min.