17.1 C
New York
Wednesday, September 10, 2025

வேலைத்தளத்தில் அசிட் கசிவு- 18 பேர் மருத்துவமனையில்.

Granges, இல் உள்ள Saint-Hubert Foundation இல், ஒரு வேலைத்தளத்தில் அசிட் கசிவினால் பலர் பாதிக்கப்பட்டதுடன், பலர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

நேற்றுக்காலை 8 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதையடுத்து 64 பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர் என்று Valais பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அவர்களில் 18 பேர் மருத்துவ பரிசோதனைகளுக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த பகுதியில் அம்புலன்ஸ்களும் மருத்துவர் ஒருவரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles