16 C
New York
Tuesday, September 9, 2025

சூரிச்சில் கட்டாய ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டிய அகதிகள்.

எதிர்காலத்தில், சூரிச் மாகாணத்தில் அகதிகள் மற்றும் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட நபர்கள், ஒரு ஒருங்கிணைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது கட்டாயமாக்கப்படவுள்ளது.

சூரிச் கன்டோன் நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானத்தில் FDP, SVP மற்றும் Mitte ஆகிய கட்சிகள் இதனை நடைமுறைப்படுத்த கோருகின்றன.

புலம்பெயர்ந்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமைகள் மற்றும் மதத்தை விட சட்டம் மேலோங்கி நிற்கிறது என்ற கொள்கை போன்ற சுவிஸ் சிவில் சமூகத்தின் பல்வேறு அடிப்படைக் கொள்கைகளுக்கு இணங்குவதாக உறுதியளிக்க வேண்டும்.

ஜெர்மன் மொழியை கட்டாயமாக கற்றுக்கொள்ள வேண்டும்.என்றும் இந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles