16.1 C
New York
Tuesday, September 9, 2025

கரும்புகை வெளியானது – இன்றும் தொடரவுள்ள திருத்தந்தை தெரிவுக்கான வாக்கெடுப்பு.

கத்தோலிக்க திருச்சபையின் புதிய திருத்தந்தையைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று தொடர்ந்து நடைபெறவுள்ளது.

நேற்று பிற்பகல் 133 கர்தினால்களும் மூடிய அறைக்குள் வாக்கெடுப்புகளை நடத்திய போதும், எவருக்கும் தேவையான பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் புதிய திருத்தந்தை தெரிவு செய்யப்படவில்லை என்பதன் அடையாளமாக, வாக்கெடுப்பு நடந்த Sistine Chapel. இன் புகை போக்கி வழியாக கரும்புகை வெளியிடப்பட்டது.

அதன் பின்னர் வாக்கெடுப்பு இடம்பெறாது என்றும் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து இன்று மீண்டும் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தந்தையாக தெரிவு செய்யப்படுபவர் மூன்றில் இரண்டு வாக்குகளைப் பெற வேண்டும் என்பதால், இன்று காலையும் பிற்பகலிலும் வாக்கெடுப்புகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles