Fribourg இல் உள்ள Planche-Inférieure அருகே இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஒரு பொதுப் பேருந்தும், சுமார் 20 குழந்தைகளை ஏற்றிச் சென்ற பாடசாலைப் பேருந்துமே மோதிக்கொண்டன.
விபத்தை அடுத்து, குழந்தைகள் பாடசாலைகளுக்கு நடந்தே சென்றுள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் மருத்துவ உதவியாளர்களால் பரிசோதிக்கப்பட்டனர்.
இரண்டு பேருந்து ஓட்டுநர்களும் சம்பவ இடத்திலேயே மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டனர்.
எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
மூலம்- 20min