புதிய திருத்தந்தையை தெரிவு செய்யும் முயற்சி மீண்டும் தோல்வியடைந்துள்ளது.
திருத்தந்தையை தெரிவு செய்வதற்காக வத்திக்கானில் உள்ள Sistine Chapel இல் 133 கர்தினால்கள் மூடிய அறைக்குள் இன்று காலையும் வாக்களித்தனர்.
இதையடுத்து இன்று பிற்பகல் Sistine Chapel இன் புகைபோக்கி வழியாக மீண்டும் கரும்புகை வெளியானதால், திருத்தந்தை தெரிவு செய்யப்படவில்லை என்பது உறுதியானது.
இந்த நிலையில் மீண்டும் பிற்பகல் 5.30 மணியளவில் வாக்கெடுப்பு நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்- 20min